[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

chance-for-rain-in-tamilnadu

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. காலை 10 மணிக்கெல்லாம் தொடங்கிவிடும் வெயில் கிட்டத்தட்ட மாலை 6 மணி வரை விடாமல் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். கோடை மழை பெய்யாதா.? என ஏங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ சென்னையை பொறுத்தவரை வரும் வாரத்தில் தற்போது நிலவும் வெப்பநிலையே நிலவும். அதேசமயம் உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கிலிருந்து வரும் காற்றும் கிழக்கிலிருந்து வரும் காற்றும் ஒன்றுக்கொன்று மோதுவதால் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close