[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

சென்னையில் சாலையோரம் நின்றிருந்த பேருந்தை சிறுவர்கள் இயக்கி விபத்து..!

boys-who-run-the-bus-in-chennai-and-make-accident

சென்னையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தை விளையாட்டாக ஓட்டிச் சென்ற சிறுவர்கள், மின்வாரியப் பெட்டியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.

எம்எல்ஏக்கள் தங்கும் விடுதிக்குச் செல்லும் சாலையில், சில தனியார் நிறுவன பேருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். இவற்றில் மெட்ரோ ரயில் பணியாளர்களை அழைத்துச் செல்லும் பேருந்தில் ஏறி விளையாடிய சிறுவர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விளையாடியுள்ளனர். ஓட்டுநரைப் போல பாவனை செய்த அவர்கள் என்ஜின் சுவிட்சை அழுத்தியபோது, பேருந்து உயிர்பெற்று இயங்கத் தொடங்கியது.

இதில் உற்சாகமுற்ற சிறுவர்கள் பேருந்தை இயக்கிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பேருந்து மின்வாரியப் பெட்டி ஒன்றில் மோதி நின்றது. இதனால் இறங்கி ஓடிய சிறுவர்களை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பேருந்தில் சாவி இல்லாமல், பட்டனை அழுத்தி இயங்கும் வகையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close