[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கண்டெய்னர் லாரி மீது கார் மோதல்: முன்னாள் எம்.எல்.ஏ உட்பட 3 பேர் உடல் நசுங்கி பலி!

ex-mla-among-3-dead-in-car-container-lorry-collition

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, சுந்தரவேல். இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பத்தூர் நகர செயலா ளராக இருந்தார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு கண் பிரச்னை. அதற்காக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவரை சந்திக்க முன் அனுமதி வாங்கியிருந்தனர். காலை 9 மணிக்கு மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதால் காலையில் 5 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து காரில் கிளம்பினர். காரை அவர்கள் டிரைவர் வீரமணி ஓட்டினார். 

கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, கண்டெய்னர் லாரி மீது, கார் மோதியது. மோதிய வேகத்தில் கண்டெய்னரின் அடியில் புகுந்து கார் நசுங்கியது. இதில் சுந்தரவேல், அவர் மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்தந்தும் உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், லாரியின் அடியில் சிக்கிக்கொண்ட காரை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி காரில் இருந்து அவர்களது உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close