[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“தேர்தல் ஆணையம் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதா?” - ஸ்டாலின் எச்சரிக்கை

dmk-leader-mk-stalin-warning-to-election-commission-for-support-modi

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக போய்க் கொண்டிருந்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

திருப்பூர் தொகுதி பெருமாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் வேலூரில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலை நிறுத்த சதி நடப்பதாகக் குற்றம்சாட்டினார். 

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தபோது எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை எனக் கூறினர். இந்தச் சோதனை திமுகவை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் எனக் குற்றஞ்சாட்டினார். பெரியாரும்,‌ அண்ணாவும் சந்தித்துக் ‌கொண்ட திருப்பூர், ஜிஎஸ்டி வரியால் வெறுப்பூராக மாறியிருப்பதாக விமர்சித்தார்.

முன்னதாக, திமுக பொருளாளர் துரை முருகன் மற்றும் அவரது மகன் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய குறிப்பிடத்தக்கது. இந்தச் சோதனை தங்களை பயமுறுத்துவதற்காக என்றும், ஆனால் இதற்கெல்லாம் தாங்கள் பயப்படமாட்டோம் என்று துரை முருகன் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தூத்துகுடி திமுக நிர்வாகி அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

மேலும் இன்று திமுக கூட்டணி கட்சியான விசிக நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான திருச்சி மன்னார்புரம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close