[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சென்னையில் பெண்ணிடம் திருநங்கைகள் வழிப்பறி

gang-of-3-transsexuals-snatches-bag-from-woman

சென்னையில் மூன்று திருநங்கைகள் இணைந்து பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. வயது 45. இவர் அப்பகுதியில் உள்ள லூஸ் சர்ச் பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று திருநங்கைகள் ரேவதியை வழிமறித்து ஆசீர்வதித்துள்ளனர். அப்போது ரேவதி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரிடம் இருந்த கைப்பையை பிடுங்கிய மூன்று திருநங்கைகள் வேகமாக ஓடியுள்ளனர். அத்துடன் அவ்வழியாக வந்த ஆட்டோ ரிக்ஷோவில் ஏறிய அவர்கள் வேகமாக சென்றுவிட்டனர். ரேவதி கூச்சலிட்டும் கூட அந்த ஆட்டோ ரிக்ஷா நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

இதனையடுத்து ரேவதி இதுகுறித்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வரும் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகளை தேடி வருகின்றனர். ரேவதி தனது கைப்பையில் சில ஆவணங்களை தவிர ரூ.8000 பணமும் வைத்திருந்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close