[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு

போலி அறிக்கை: ஐ.ஜி. பதிலளிக்க உத்தரவு

fake-report-high-court-asks-answer-from-ig

ஐ.ஐ.டி. பேராசிரியரிடம் பெறப்பட்டதாகக் கூறி போலியான அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. இன்று பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர் எஸ்.அருணாச்சலம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், தமிழக காவல்துறையில் விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் சரியான பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதனைப் பரிசீலிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அளித்த விடை தவறானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி எது சரியான விடை என்பதை ஐ.ஐ.டியில் பணியாற்றும் கணித நிபுணரிடம் அறிக்கை பெற்றுத் தாக்கல் செய்யும்படி சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஐ.ஐ.டி.யில் கணிதப் பிரிவு பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் அரசின் விடை தான் சரி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஐ.டி.யில் டி.மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் இல்லை என்றும், அப்படி ஒரு நபர் இதற்கு முன் பணியாற்றி ஓய்வு பெறவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற நகலை மனுதாரர் தாக்கல் செய்தார். ‌ மேலும், அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் புகார் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலி ஆவணங்களை தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி ஆகியோர் மீது மோசடி கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதி, ஜி.வி.குமார் என்பவர் யார்..? கணித நிபுணர் அறிக்கையை பெற இவர் எப்படி நியமிக்கப்பட்டார்? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான பதிலை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தையும், நீதித்துறை பதிவாளர் தன் கட்டுபாட்டில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close