[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஈரோட்டில் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி

mdmk-is-contesting-on-rising-sun-symbol-in-erode

ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  

வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அக்கட்சியின் பொருளாளரான அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என வைகோ தெரிவித்தார். ஆனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படவில்லை. திமுக சின்னமான உதய சூரியனிலெயே போட்டியிடுவாரா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மக்களவை தொகுதியில் தனிச்சின்னத்திற்கு பதிலாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் ''மதிமுகவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளோம்'' என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படியே, மதிமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close