[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

madras-high-court-dismissed-3-petitions-on-postponed-dates-of-lok-sabha-election-in-tamilnadu

மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய 3 மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ஏப்ரல் 18ஆம் தேதி சித்திரை விழாவின் தேரோட்டம் நடைபெறும் என்பதால், மதுரையில் நாடாளுமன்றத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி, வ‌ழக்கறிஞர் பார்த்தசாரதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல், கிறிஸ்தவர்களின் புனித வாரத்தில் தேர்தல் வருவதால் தள்ளி வைக்க கிறிஸ்தவ அமைப்பும் கோரியிருந்தது. மேலும், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்றக் கோரி கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிப்பதாக, தேர்தல் ஆணையம் சார்பில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வின் முன் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

         

சென்னையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் முடிவைக் கேட்ட பிறகே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவுக்கு கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது. அதேபோல், கிறிஸ்தவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. 

இந்நிலையில், தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close