[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

dinakaran-officer-burned-case-life-sentence-to-9

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் கும்பலால் எரிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்களான கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனு இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் அட்டாக் பாண்டி உள்ள 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பவத்தின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close