அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்ய நடவடிக்க எடுக்கப்படும், மாணவர்களுக்கான கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக அறிவித்தது. அதேபோல் அதிமுகவும் பல வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. இரண்டு கட்சிகள் வெளியிட்ட வாக்குறுதிகளிலும் பொதுவான அம்சங்கள் சில இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் இன்று தனது பரப்புரையை தொடங்கினார். காலையில் பரப்புரையை தொடங்கிய அவர் மக்களை வீடு வீடாக நேரில் சென்று பார்த்து வாக்கு சேகரித்து வருகிறார். அதேபோல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தனது மகனை ஆதரித்து தேனியில் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தனது தேர்தல் அறிக்கையில் சிறு மாற்றத்தை செய்து திமுக வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் அனைத்துப் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!