[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டி - ஜி.கே.வாசன்

tmc-president-gk-vasan-said-tamil-manila-congress-contested-in-thanjavur-constituency

தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கூட்டணி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்நிலையில், கூட்டணி தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 

Related image

ஜி.கே.வாசன் பேசுகையில், “தமாகா என்பது வளமான தமிழகம்..வலிமையான பாரதம் என்பதன் அடிப்படையில் செயல்படுகிறோம். தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சியாக உள்ளோம். நாட்டின், பாதுகாப்பு, வளர்ச்சி, நலன் இதில் ஒத்த கருத்துடையவர்களுடன் நாங்கல் இணைந்து செயல்படுவோம். மேலும், தமிழகத்தில் எங்கள் எண்ணமெல்லாம் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் தனித் தன்மையுடன் தமாகா செயல்பட்டு வருகிறது. 

Related image

தேர்தல் கூட்டணி என்பது வேறு. கட்சியின் லட்சியம் என்பது வேறு. மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எண்ணிக்கை என்பதை காட்டிலும் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். குறைகளை நிறைகளாக்க பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு, தேச வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.. 

அதோடு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close