[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்

tn-assembly-by-poll-elections-to-be-held-with-loksabha-elections-2019

மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கான அனைத்து இடைத்தேர்தல்களும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளார். ஏப்ரல் 11இல் தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே 23இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

              

அதேபோல், மக்களவை தேர்தலுடன் அனைத்து சட்டப்பேரவை இடைத்தேர்தல்களும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியே இடைத்தேர்வு நடைபெறவுள்ளது.

      

தமிழகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தன், திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அசாம், சட்டீஸ்கரில் 3 கட்டங்களாகவும், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு 4 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close