[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்

மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணையம்

dates-for-national-election-and-polls-in-4-states-to-be-announced-at-5-pm-by-the-election-commission

மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செய்துவருகிறது. தேர்தல் குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதுமட்டுமின்றி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, 2014 மார்ச் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது 5 நாட்கள் கூடுதலாக ஆகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஏப்ரல் மூன்றாம் வாரம் தொடங்கி மே இரண்டாம் வாரத்துக்குள் நாடு முழுவதும் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. பல்வேறு பதற்றம் நிறைந்த தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக, வேட்பு மனுத்தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெற கெடு என பல நாட்கள் தேவைப்படுவதுடன், கட்சிகளின் பரப்புரைக்கும் ஒரு மாதம் வரை அளிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, தேர்தல் இந்த வாரத்தின் முதலிரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம், செய்தியாளர்களை சந்திக்கும் என்றும் அப்போது தேர்தல் தேதி உள்ளிட்ட கால அட்டவணை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களவை தேர்தல் தேதியுடன் ஒடிஷா, சிக்கிம் போன்ற பேரவைகளுக்கும், தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close