[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

“பதிலடி கொடுத்த விமானப்படைக்கு நன்றியும், பாராட்டுகளும்” - விஜயகாந்த்

dmdk-chief-secretary-vijayakanth-wishes-indian-air-force

சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை நடத்தியுள்ள தாக்குதலை பாராட்டி விஜயகாந்த் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தேமுதிக சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் குடும்பத்தினருக்கு தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஆறுதலாக இருக்கும். இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் இன்று தாக்குதலில் ஈடுபட்டு விமானப்படையை சேர்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், புல்வாமாவில் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறைகள் தகர்த்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பாலகோட் பகுதியில் அதிகாலை தாக்குதலை நடத்தியது. முக்கியமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறை இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close