[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி 

the-old-woman-tried-to-fire-near-the-collector-s-room-in-the-office-of-the-collectrate-at-nellai

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் சோதனையையும் மீறி ஆட்சியர் அறைக்கு அருகில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இசக்கிமுத்து என்பவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கான வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இரு வாயில்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றிலும் இரவு, பகலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது போலீஸ் சோதனை இல்லாமல் ஒருவர் கூட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைய முடியாது சூழல் இருந்து வரிகிறது.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று வழக்கம் போல நடைபெற்றது. அதில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஏராளமான பெண்கள் மனு அளிக்க வந்திருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில், தென்காசி வடகரையைச் சேர்ந்த ராசம்மாள் என்பவர் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார். மனுக்களைப் அளிப்பதற்கான வரிசையில் நின்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைய வேண்டிய நேரத்தில் பையில் மறைத்து வைந்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலைவழியாக ஊற்றியபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுத்தார்கள். உடனடியாக போலீஸார் சென்று அந்தப் பெண்ணை தடுத்து விசாரணை செய்தனர். அப்போது பேசிய அவர்,“எனது வீட்டை  ஊரிலுள்ள சிலர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். அதைத் தடுக்க வலியுறுத்தி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தேன். அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு கொடுத்தேன். அதற்கும் பதில் இல்லை. 

அதோடு, என்னை ஏமாற்றிவர்கள் எனது வீட்டுக்கே வந்து அடித்து மிரட்டுகிறார்கள். எனது விட்டை தீ வைத்துக் கொளுத்தப் போவதாக மிரட்டுகிறார்கள். எங்கே சென்று புகார் செய்தாலும் தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்கிறார்கள். அதனால் அச்சம் அடைந்த நான் ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்யும் எண்ணத்தில் வந்தேன். இங்கே என்னைத் தடுத்து விட்டார்கள். எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று கதறினார்.

காவல்துறையின் பலத்த சோதனையை மீறி, மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மூதட்டி கைப்பையில் மொத்தம் 6 பாட்டில்களில் மறைத்து எடுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பெண் காவலர்கள் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்த நிலையில் எப்படி இச்சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து அதிர்ச்சி அடைந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Old womanFire
Advertisement:
Advertisement:
[X] Close