[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே? - நெட்டிசன்கள் கேள்விகள்

activist-mugilan-disappearance-amnesty-india-calls-for-investigation

சமூக செயற்பாட்டாளரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலன் மாயமானது குறித்து சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் அமைப்புகளில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

          

அப்போது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். தன்னுடைய குற்றச்சாட்டிற்காக, “கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற தலைப்பில் வீடியோ படம் ஒன்றை ஆதாரமாக வெளியிட்டார். மேலும், இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் கூறியிருந்தார்.

       

பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயில் சென்றுள்ளார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. இதையடுத்து எழும்பூர் ரயில்வே போலீசில், தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

              

மக்களின் போராட்டங்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதால், அவரை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அவரை ஆஜர்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விசாரணை வரும் 22 -ம் தேதி நடைபெற உள்ளது. வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் ஆகியோர் இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். 

               

கடந்த பிப்ரவரி 15ம் தேதி முகிலன் மாயமானது முதல், அவர் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் முகிலன் குறித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். #WhereIsMugilan என்ற ஹேஷ்டேக்கில் பலரும் முகிலன் மாயமானது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.  

              

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close