தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக திருநங்கை ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ராஜாத்தி. இவர் லூர்தம்மாள்புரம் பகுதியிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் வழக்கம்போல் ராஜாத்தி கோயிலுக்கு பூஜை வேலைகளை செய்துள்ளார். அப்போது கோயிலுக்குள் திடீரென புகுந்த மருது என்பவர், கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ராஜாத்தியை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ராஜாத்தி கீழே சாய்ந்துள்ளார். பின்னர் ராஜாத்தியின் தலையை தனியாக துண்டித்த மருது அதனை கோயிலுக்கு அருகில் வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த வடபாக்கம் போலீசார் அங்கு சென்று இறந்தவரது உடலையும் , தலையையும் மீ்ட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே முன்விரோதம் காரணமாக திருநங்கை ராஜாத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் இதற்கு முன்பு மருதுதான் பூசாரியாக இருந்துள்ளார். ராஜாத்தி கோயிலில் பூசாரியாக ஆன பின்பு, இவருக்கும் மருதுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கோயிலில் திருவிழா நடத்துவது, கோயிலுக்காக நிதி வசூல் செய்வது உள்பட பல விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் முன்விரோதம் காரணமான திருநங்கை ராஜாத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!