[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

போர்க்கால அடிப்படையில் குடிநீர் திட்டப்பணிகள் - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

cm-edappadi-palanisamy-order-for-make-drink-water-renouncement-work-immediately

கோடை காலத்தை முன்னிட்டு புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட குடிநீர் திட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் ஆட்சியர்கள் மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோடை காலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில், வடகிழக்கு பருவமழையின்போது போதிய மழை இல்லாததை கருத்தில் கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார். 

chennai-metro-water-officials-decide-to-supply-60-litres-less-water-a-day-per-person

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தியுள்ளார். கண்காணிப்பு அலுவலர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் குறைந்தபட்சம் 3 முறை சென்று குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

புதிய ஆழ்துளை கிணறுகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். சென்னையில் சீரான குடிநீர் வழங்க ஏதுவாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு 122 கோடி ரூபாயும், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறைக்கு 36 கோடி ரூபாயும் அவர் ஒதுக்கியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close