[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பிரதமர் மோடி வருகையும்.. சமூக வலைத்தள ட்ரெண்டிங்கும்..

pm-modi-visit-madurai-for-aiims-social-media-trending

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருப்பதையொட்டி சமூக வலைத்தளங்களின் சில ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் மதுரை வந்த அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் காரில் சென்றார். இதற்கிடையே பிரதமரின் வருகையையொட்டி சமூக வலைத்தளங்களில் சில ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் தரப்பினர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கியுள்ளனர். அதேசமயம் பிரதமரின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் #TNWelcomesModi மற்றும் #AIIMSMadurai உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்த ட்ரெண்டாக்கும் நிகழ்விற்கு சில அரசியல் பின்னணிகளும் உள்ளன. ஏனென்றால் பிரதமர் வந்திருப்பது தமிழகத்திற்கு என்பதால், அவரை எதிர்த்து பதிவு செய்பவர்களின் பதிவுகள், ட்விட்டரின் சென்னை அளவிலான ட்ரெண்டிங்கில் எதிரொலித்தது. ஆனால் சென்னை அளவில் அது முதலிடத்தில் ட்ரெண்டாவதற்கு முன்னரே, இந்திய அளவு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துவிட்டது.

இதனால் பிரதமரின் வருகையை பயன்படுத்தி அவருக்கெதிரான ட்ரெண்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தகவல்தொழில்நுட்ப அணிகள் துரிதமாக செயல்பட்டுள்ளன. அதனால்தான் சென்னை அளவில் ட்ரெண்ட் ஆவதற்கு முன்னர் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. ஆனால் அதேசமயம் கடந்த மோடி தமிழகம் வரும்போது #GoBackModi என்பது உலக அளவில் ட்ரெண்டானதால், இந்த முறை விடக்கூடாது என்ற நோக்கத்தில் பாஜக தொழில்நுட்ப அணியும் கவனத்துடன் செயல்பட்டுள்ளது. அதன்காரணமாகவே #GoBackModi என்பதை பின்தொடர்ந்தே #TNWelcomesModi என்பதும் ட்ரெண்டாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களங்கள் பல கட்டங்களாக மாறியுள்ள நிலையில், சமூக வலைத்தள பரப்புரை என்பதும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பதையே இந்த நிகழ்வு வெளிப்படுத்துவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close