[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு

rs-1000-pongal-gift-for-tn-people

திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் காலை 10 மணிக்கு ஆளுநர் ‌பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழில் பேசிய தனது உரையை தொடங்கிய ஆளுநர், அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்றார். அத்துடன் எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் என்றார். மேலும் இதுவே தனது செய்தி என்றும் அவர் கூறினார். ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அதேசமயம் சட்டப்பேரவையில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்தார். அதன்படி திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார். திருவாரூர் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாகவே திருவாரூர் மாவட்டத்தல் மட்டும் பொங்கல் பரிசு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close