[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் : முன்பதிவு எப்போது ?

pongal-special-buses-announcement-transport-minister-vijayabaskar

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒரு வார விடுமுறையாக இப்பண்டிகை பார்க்கப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மொத்தம் 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு பொங்கலுக்கு மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அதற்காக முன் வருகை ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இதைத் தொடர்ந்து 2ஆம் தேதி மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் முழு அறிவிப்பு வெளியாகும். சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு கவுன்டர்கள் ஜனவரி 9ஆம் தேதி திறக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதாவரத்திலிருந்தும், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியிலிருந்தும் செல்லும். சிதம்பரம், கும்பகோணம் ஆகிய வழியாக செல்லும் பேருந்துகள் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்தும், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரத்திலிருந்தும் செல்லும். மற்ற ஊர்களுக்கு செல்லும் அதிகப்படியான பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவுள்ளன. தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு இருந்தால் மக்கள் புகார் தெரிவிக்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close