[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர்

chief-security-officer-perumalswamy-will-be-appear-to-arumugasamy-commission

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுதாகரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர்.

Related image

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

Related image

அதன்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 145 பே‌ரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுதாகர் மற்றும் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.

Image result for security guard Perumalsamy

அவர்களிடம் ஜெயலலிதாவிற்கு எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களுடன் நீங்கள் இருந்தீர்களா ? மருத்துவமனையில் சிகிச்சைகள்  அளிக்கப்பட்ட போது எப்போது அவரை பார்த்தீர்கள் என்பது போன்ற கேள்விகளுடன் விசாரணை நடத்தப்பட உள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. மேலும் தற்போதய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக பெருமாள்சாமி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close