[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

cabinet-approves-establishment-of-1-new-aiims-each-in-tamilnadu-telangana

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. 1,500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாகவும், இதற்கான நிலம், மின்சாரம், நான்கு வழிச்சாலை, குடிநீர் உள்ளட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுவர பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

அதனையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியானது. மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவலில் இந்த விவரம் தெரியவந்தது.

             

இதனிடையே இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சசர் விஜயபாஸ்கர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்த தடையும் இல்லை என்று கூறியிருந்தார். மருத்துவமனை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறியிருந்த அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

      

இதனிடையே, தமிழகத்தில் மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,258 கோடியில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார். அதேபோல், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

           

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும், அது எந்த இடத்தில் என்பது உறுதி செய்யப்படாமலே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீண்டது. தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளை கடந்து நீடித்து வந்த இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தற்போது முற்று பெற்றுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close