[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது 

income-tax-officers-to-start-the-inquiry-to-v-k-sasikala-in-prison

சசிகலா குடும்பத்தினர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கினர்.

Image result for sasikala

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போயஸ்கார்டன் இல்லம், மிடாஸ் நிறுவனம், தனியார் தொலைகாட்சி என சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில், ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தற்போதைய ஆய்வு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

Image result for vk-sasikala 

இந்நிலையில் கர்நாடக‌ மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறைத்துறை நிர்வாகத்திடம் வருமான வரித்துறையினர்  முறையாக அனுமதி வாங்கினர். இதன் தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் இன்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் உள்ள சசிகலாவிடம் இன்றும், நாளையும் வருமான வரித்துறையினர்  விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Related Tags : V K Sasikala
Advertisement:
Advertisement:
[X] Close