[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

the-supreme-court-has-said-that-karnataka-government-s-proposal-could-not-be-banned

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அங்கு அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதனையெடுத்து மேகதாது அணை தொடர்பான ஆய்வறிக்கைக்கு ஏதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன், கர்நாடக நீராவரி நிகம் லிமிடெட் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.அதில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, காவிரி ஆற்றில் தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை சில மாற்றங்களுடன் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளதையும் தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது எனவும் இது தொடர்பாக கர்நாடகா அரசும், மத்திய அரசும் 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close