[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

மேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..!

mekedatu-dam-issue-sc-to-heart-tn-petition-today

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன், கர்நாடக நீராவரி நிகம் லிமிடெட் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, காவிரி ஆற்றில் தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலின்றி எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை சில மாற்றங்களுடன் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளதையும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பான ஆய்வறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டது. எனவே, கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close