[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அதிமுக தொண்டர் மகன் மரணம் - ஸ்டாலின் நிதியுதவி

admk-cadre-son-dead-mk-stalin-financial-assistance

கொளத்தூர் தொகுதியில் அதிமுக தொண்டர் ஒருவரின் மகன் காய்ச்சல் காரணமாக இறந்த நிலையில், அவரது வீட்டுக்கு சென்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலுக்கு ஆங்காங்கே ஏற்படும் உயிரிழப்புகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனிடையே கொசு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜெயமீம் நகரில் காய்ச்சல் காரணமாக மித்ரன் என்ற சிறுவன் கடந்த 31-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் 1-ஆம் தேதி கொளத்தூரில் ஆய்வுக்கு சென்ற ஸ்டாலின் சிறுவனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறியபோது, “மித்ரன் உயிரிழந்த அன்றே திமுக சார்பில் நல்லடக்க செலவாக 25,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. பின்னர் நேரில் வந்து ஆறுதல் கூறி 50,000 ரூபாய் கொடுத்தார்கள். நாங்கள் சேர்ந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வந்து பார்க்காத போது ஸ்டாலினின் ஆறுதல் கூறினார். அது எங்களுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close