[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

tn-police-ordered-to-rules-for-crackers

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக் கடை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளருக்காக 20 நெறிமுறைகளை காவல்துறையினர் அறிவித்துள்ளது.  

காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட நாகலுத்து தெருவில் தொகுப்பு வாடகை வீட்டில் வசித்து வருபவர் மைதீன். இவர் அப்பகுதியில் பட்டாசு விற்பனைத் தொழில் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில், காஞ்சிபுரத்தை அடுத்த நெமிலி பகுதியில் நாட்டு ரகப் பட்டாசுகளை அதிகளவில் வாங்கி வந்து, அதனை வீட்டில் வைத்து பிரித்து பேக்கிங் செய்யும் பணிகளில் அவரும், அவரது மனைவி தாஹிரா பானு மகன் முஷ்டாக் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர். 

காஞ்சிபுரம் வெடிவிபத்து

நேற்று 3 மணியளவில் பட்டாசுகளைப் பிரிக்கும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இதில், நாட்டு வெடி ரக பட்டாசுகளில் தீ வேகமாகப் பரவி பலத்த சப்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சஹிரா பானு, முஷ்டாக் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

மேலும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மஸ்தானும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து பலத்த காயமடைந்த சர்புதீன் பானு என்ற மூதாட்டியும், மைதீனும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சர்புதீன் பானு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது அனுமதியில்லாமல் பட்டாசுகளை வைத்திருந்த குற்றத்திற்காக வெடிபொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் மைதீன் மீதும், அனுமதி இல்லாமல் அதிக அளவு பட்டாசுகளை விற்பனை செய்ததாக பக்ருதீன் என்பவர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் பட்டாசு உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு கீழ்கண்ட 20 நெறிமுறைகளை விதித்துள்ளனர். இவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கூறியுள்ளனர்.

பட்டாசு உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட நெறிமுறைகள்:-


1. பட்டாசு தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் கண்டிப்பாக உரிய உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
2. வெடி பொருட்களை பாதுகாப்பான மூடிய காங்கிரீட் கட்டடத்தில் மட்டுமே சேமித்து வைத்து விற்பனை செய்யவேண்டும்.
3. ஓலையினால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசுகளை சேமிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
4. வெடிபொருட்களை சேமித்து வைக்கும் இடத்தில் போதிய தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையிலும் மற்றும் அந்த உபகரணங்களை பயன்படுத்தும் முறையினை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
5. தேவைக்கு அதிகமான Stock (20கிலோ மேல்) கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
6. அளவுக்குமேல் விற்பனை செய்தது ஆவணத்தின் மூலமாகவோ அல்லது எதிரியை கைது செய்யும்போது அவரிடமிருந்த வெடிபொருட்கள் யாரிடமிருந்து அளவுக்கு அதிகமாக பெறப்பட்டது என்று கண்டறியப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
7. உரிய இடமல்லாது மாற்று இடத்தில் அனுமதி பெறப்படாத இடத்தில் வெடிபொருட்கள் stock வைக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


8. தகுந்த உபகரணங்கள் இல்லாது தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
9. வியாபாரத்தினை தகுந்த முகவர்களிடம் இல்லாமல் குழந்தைகளிடமோ, மனவளர்ச்சி குன்றியவர்களிடமோ விற்பானை செய்யக்கூடாது. 
10. வாடகை கட்டடமாக இருந்தால் உரிமையாளரின் அனுமதி பெற்றே கடை நடத்தவேண்டும்.
11. தரைத்தளம் தவிர மாடிகளிலும், நிலவறைகளிலும் பட்டாசுகளை சேமித்துவைக்கக்கூடாது.
12. பட்டாசு விற்பனை துவங்கிய பின் அக்கடைகளில் மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. 
13. புகைப்பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையினை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும்.
14. மின் தடையின்போது மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.
15. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசுகளை சேமிக்கக்கூடாது.
16. வெடிப்பொருட்களை குடியிருப்புகளின் அருகாமையில் சேமித்து வைக்கக்கூடாது. பாதுகாப்புதூரம் விதிமுறைகளின்படி கடைபிடிக்கவேண்டும்.
17. எதிர் எதிரே பட்டாசு கடைகளை நடத்தக்கூடாது.


18 கடைகளை மூடும்போது பலமுறை பார்வையிட்டு கவனத்துடன் மின் இணைப்புகளை துண்டித்து பின்னர் கடைகளை மூடவேண்டும். 

19. ஈரச்சாக்குகளை எந்த நேரமும் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

20. வெளிநாட்டு பட்டாசு பொருட்களை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close