[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

முதலமைச்சருக்கு எதிராக விமர்சனம் - வழக்கு பதிவு செய்தது சைபர் கிரைம்

case-filed-on-meme-creators-for-cm-palanisamy-memes

தமிழக முதலமைச்சரை இழிவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைமில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த திங்கள்கிழமை முதல் தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்தி, மீம் என்ற பெயரில் இழிவாக சித்தரித்து பரப்பியதாகவும், அது முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை வேண்டுமென்றே சில நபர்கள் திட்டமிட்டு செய்வதாகவும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக  Thalapathy Jaga (@ThalapathyjaGa5), Hari Prabakaran (@HariIndic), Doha Talkies (@dohatalkies), Meena (@Meena0hrd), #AdmkFails (@admkfails), Mahesh (@Mahesh_SPK) and RajaBekarChem (@RajasekarAsho7) இந்த கணக்கில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது

கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் , IPC 504, IPC 505(1)(b), 505(2), IPC 506 (1) மற்றும் IPC 507ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்வேறு பெயர்களில் செயலபடும் இந்த சமூக வலைத்தள கணக்குகளை பராமரிப்பது யார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிகிறது 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close