[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள் 

rs-5-is-minimum-bus-fare-in-chennai

சென்னையில் நேற்றில் இருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என ஒட்டப்பட்ட பேருந்துகளை காண முடிகிறது. ஏற்கனவே குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 தானே என யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் இது மாநகரப் போக்குவரத்து கழகத்தின் புதிய முயற்சி என தெரிந்தது. அதிகரிக்கும் பெட்ரோல் விலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. யார் குறைப்பார் என்ற கேள்விக்கு டாலரை கைகாட்டி விட்டு சென்று விட்டார்கள். கஷ்டப்படுவது சாதாரண மக்கள். 

தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களிடம் எதிர்ப்பும் ஆதரவும் இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் விலை காரணமாக ஆட்டோ கட்டணம் உயர்வு, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என சாமனியர்களுக்கு பிரச்னை பண வடிவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் சென்னை மக்களின் போக்குவரத்து செலவை குறைக்க, அரசுப் பேருந்துகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்த, ரூ.5 கட்டணம் என்ற போஸ்டரை தாங்கி வருகின்றன அரசுப் பேருந்துகள்.

 

மாநகரப் போக்குவரத்து கழகத்தின் இந்த முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 4 வாரங்களில் பேருந்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்த போக்குவரத்து கழகம் தற்போது சென்னையில் சுமார் 300 பேருந்துகளை கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ரூ.5க்கான தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும் அதிவிரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.7 என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட உள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close