[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

“ஸ்டாலினுடன் அரசியலில்தான் மோதல் குடும்பத்தில் இல்லை” - மு.க.அழகிரி

mk-alagiri-said-about-mk-stalin-and-dmk-and-rally

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அரசியலில் தான் மோதலே தவிர குடும்பத்தில் எந்த மோதலும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைந்த பிறகு அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்பதற்கு முன்பே திமுகவில் மு.க.அழகிரி சலசலப்பை ஏற்படுத்தினார். தன்னை திமுகவில் சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இந்நிலையில் இன்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அமைதிப் பேரணியை மு.க.அழகிரி நடத்துகிறார். இதில் ஏராளமான அழகிரியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். 

இதற்காக வெளியூர்களில் இருந்து அழகிரியின் தொண்டர்கள் மெரினாவை நோக்கி வருகை தந்திருந்தனர். இதற்கான பாதுகாப்பு பணியில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்தப் பேரணி தொடர்பாக ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். அதில், “கலைஞர் இறந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகின்றன. இதையொட்டி ஒரு அமைதிப்பேரணி நடத்த வேண்டும் என கலைஞரின் விசுவாசிகள் என்னிடம் கேட்டனர். அந்தக் காரணத்தால் தான் இந்தப் பேரணி முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேரணி மூலமாக நான் எதையும் சொல்ல நினைக்கவில்லை. பேரணிக்கு பின்னர் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். என்னை கட்சியில் சேர்க்கும்படி இதுவரை நான் யாரிடமும் பேசவில்லை. என்னிடம் திமுக நிர்வாகிகள் யாரும் பேசவில்லை. எனது ஓரே கோரிக்கை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது தான். நான் திமுகவில் இணைந்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும். எனக்கும் ஸ்டாலினுக்கும் இருக்கும் பிரச்னையை ஊடங்கள் பெரிது படுத்துக்கின்றன. அரசியலில் எங்களுக்குள் மோதல் இருக்கலாம். குடும்பத்தில் எந்த மோதலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close