[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னையில் விடிய விடிய மழை : ஸ்தம்பித்துபோன போக்குவரத்து

heavy-rain-from-morning-in-chennai

சென்னையில் அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. சென்னையை பொருத்தவரையில் இரவுக்கு மேல் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close