[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

உண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் ? - ஜெயக்குமார் கண்டனம்

jayakumar-condemned-for-mk-stalin-about-cauvery-water-issue

தமிழக அரசின் நீர்ப்பாசனத் திட்டங்களை முழுமையாக தெரிந்துகொள்ளாமல், ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், இரண்டு முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியும், அதிலிருந்து திறந்துவிடப்படும் நீர் விவசாயம், குடிநீருக்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்திருந்தார். காவிரி டெல்டா பகுதியில் ஏரிகளும், குளங்களும் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால், 2 லட்சம் கன அடி நீர் திறந்தும் கூட குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் இன்னும் வறண்டு காட்சியளிப்பது, அதிமுக அரசின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணமாக திகழ்கிறது எனவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் நீர்ப்பாசனத் திட்டங்களை முழுமையாக தெரிந்துகொள்ளாமல், ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதாக கூறியுள்ளார். காவொரி டெல்டா மாவட்டங்களில் அனைத்துப்பகுதிகளுக்கும் நீர் சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தண்ணீர் தடையின்றி செல்வதாக குறிப்பிட்டுள்ளார். காவிரி நீரை பயன்படுத்தும் வகையில் வீராணம் ஏரியில் தூர்வாரி சேமித்ததால் தான், சென்னை 2 வாரங்களாக வீராணத்திலிருந்து குடிநீர் வருவதாகவும் கூறியுள்ளார். 

திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோயில் குளத்தில் தண்ணீர் இல்லாததற்கு காரணம் அக்குளத்தை சுற்றி வீடுகள் கட்டப்பட்டிருப்பதால் தான் என்றும், 25 ஆண்டுகளாக வான்வழி மழையால் தான் அந்தக் குளம் நிரம்பி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அளவுக்கு அதிகமாக காவிரியில் நீர் வரும்போது அது கடலில் தான் கலக்கும் என்றும், அந்த நீரை ஊருக்குள் திருப்பினால் வெள்ளம் தான் வரும் என்றும் கூறியுள்ளார். மேலும் காவிரி நீர் கடலில் கலப்பது இதற்கு முந்தைய ஆட்சிகாலங்களில் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close