[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

முழு கொள்ளளவை எட்டிய அணைகள் ! அச்சத்தில் கேரள மக்கள்

kerala-flood-dams-with-full-capacity-of-water

கேரளாவில் 33 அனைகளில் இருந்து உபரி நீர் திறக்கபட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஒட்டுமொத்த கேரளா மக்களின் வாழ்க்கையினையே புரட்டி போட்டுள்ளது. மழையினால் அனைத்து மாவட்டங்களும் மிகக்கடுமையாக பாதிக்கபட்டுள்ளன. கனமழையின் காரனமாகவும் இதுவரை 67-க்கும் மேற்பட்டோர் , உயிரிழந்த நிலையில், கொச்சி, இடுக்கி, பந்தனந்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயத்துக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மழை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாநிலத்தில் உள்ள 39 அனைகளின் நீர் வரத்தும் மிகவும் அதிகரித்து வந்த நிலையில் 33 அனைகள் முழு கொள்ளளவை எட்டி, அனைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுவதினால் ஆற்றின் கரையோரங்களில் கடுமையாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மழை நீரால் முழ்கி உள்ளன. மழையினால் பாதிக்கபட்டவர்களை ஹைலிகாப்ட்டர் உதவியுடனும் மற்றும் படகின் மூலமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். 

மீட்கபட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். பல நிவாரண முகாம்களில் பொதுமக்களுக்கு உனவு கொண்டு சேர்ப்பதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதால் நிவாரன முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளவர்கள் பலருக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக தலா 10 ஆயிரத்திற்கும் அதிகமாக நிவாரண முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.

Advertisement:
Related Tags : கேரளாகனமழைKeralaHeavy Rain
Advertisement:
Advertisement:
[X] Close