[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

உள்ளாட்சி தேர்தல் வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை

local-body-election-case-hearing-today-in-madras-hc

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-க்குள் வெளியிட்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்படாததால் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது ஆஜரான தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் ஆகியோர், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாததால் தேர்தல் அறிவிப்பை வெளியிட இயலவில்லை என்றும் பணிகள் முடிந்தவுடன் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் விளக்கமளித்தனர்.

உத்தரவை மீறியதால் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close