[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

“ஜெயலலிதா உடலை அகற்ற வேறு வழக்குகள் வரும்” - வழக்கறிஞர் துரைசாமி 

advocate-duraisamy-explained-about-why-he-withdraw-the-case-against-jayalalithaa-memorial-in-marina

மெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சட்டச்சிக்கல் வரும் என்பதால் வழக்கை திரும்ப பெற்றதாக வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உயிரிழந்தார். அவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்க செய்ய இடம் ஒதுக்கக் கோரி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்வரை நேரில் சந்தித்து அனுமதி கோரினர். ஆனால், தமிழக அரசு இடம் ஒதுக்க மறுத்துவிட்டது. அதற்கு காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டியது. இதனையடுத்து, திமுக உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணைக்கும் வந்தது. அப்போது, வழக்கறிஞர் துரைசாமி தான் தொடர்ந்த 3 வழக்குகளையும் திரும்ப பெற்றார். சட்ட சிக்கல்கள் இல்லாததால் உடனடியாக மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், வழக்கை திரும்ப பெற்றது தொடர்பாக புதிய தலைமுறைக்கு வழக்கறிஞர் துரைசாமி அளித்த பேட்டியில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சட்டச்சிக்கல் வரும் என்பதால் வழக்கை திரும்ப பெற்றேன். ஜெயலலிதாவின் சமாதி இருக்கின்ற இடத்தை பொறுத்தவரை அதனை மத்திய அரசு முடிவு செய்து கொள்ளும். மத்திய அரசாங்கத்தின் உத்தரவை செல்லுபடி ஆக்கவேண்டியது அவர்களுடைய பொறுப்பு. ஆகவேதான் வழக்கை நான் திரும்ப பெற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

                                    

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் துரைசாமி விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. ஒரு தண்டனை குற்றவாளிக்கு அரசு நினைவு மண்டபம் கட்டக் கூடாது. கண்ணகி, ஒளவையார் போன்றோரின் சிலை இருக்கும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டினால் அது அவர்களையும், தமிழ் இனத்தையும் கேவலப்படுத்துவது போல ஆகும். 

அண்ணாவுக்கு நினைவு மண்டபமும், காமராஜருக்குச் சிலையும் இருக்கும் மெரினாவில் ஊழலுக்காக 4 வருடம் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் என்பது அவர்களை கேவலப்படுத்துவது போல இருக்கும் என்பதால் வழக்குத் தொடுத்தேன். மெரினாவில் இருந்து ஜெயலலிதா உடலை அகற்ற வேண்டும் என்று முதல் வழக்குத் தொடர்ந்தேன்.

மற்ற மூன்று வழக்குகளும் கடற்கரை பராமரிப்பு விதிகளின்படி எந்த நினைவுமண்டபமும் கட்டக் கூடாது. சட்ட விதியின்படி கடலில் இருந்து 500 அடி தொலைவுக்குள் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது. ஆனால் ஜெயலலிதா நினைவு மண்டபம் கடலில் இருந்து 300 அடிக்குள் வருகிறது. அத்தோடு கடற்கரையின் அந்தப் பகுதி கடற்கரை பராமரிப்பு பகுதி -1 என்ற பிரிவுக்குள் வருகிறபடியால், அதில் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது என்று வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மத்திய அரசு பதில் மனு இன்னும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு நடத்தியிருந்தால் ஜெயலலிதா உடல் மெரினாவை விட்டு அகற்றப்பட்டிருக்கும்.

ஆனால் அண்ணா நினைவிடம் கடற்கரை பராமரிப்புப் பிரிவுக்குள் வராது. அண்ணா சமாதி உள்ள இடம் கூவம் நதிக்கரைப் பகுதி. அத்தோடு அந்தப் பகுதி சமாதியாக அரசுப் பதிவுகளில் மாற்றம் செய்யப்பட்ட இடம். அதனால் தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட எந்தச் சட்ட சிக்கலும் கிடையாது. 

அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக முதல்வரிடம், ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நேரில் சென்று முறையிட்ட போது, மெரினாவில் உடல் அடக்கம் செய்வது சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற சட்ட சிக்கல்களும் உள்ளன’ என்று தமிழக அரசு தரப்பில் காரணம் கூறப்பட்டது.

           

அவர்கள் கூறிய சட்டச் சிக்கல் நான் தொடர்ந்த வழக்குதான். ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டுமென நான் தொடர்ந்த வழக்கை, நான் திரும்ப பெறமாட்டேன் என்ற தைரியத்தில் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் கருணாநிதிக்காக நான் வழக்கை திரும்ப பெற்றுவிட்டேன். அதனால், கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய எவ்வித சட்டசிக்கலும் கிடையாது. அதை தொடர்ந்து நீதிமன்றத்திலும் உத்தரவு வாங்கிவிட்டோம்.

ஆனால், உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அகற்றுவதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன. அதற்கான வழக்குகள் விரைவில் வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close