[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

உயர்நீதிமன்றம் சென்று தவிடுபொடியாக்கி இருக்கிறோம்: ஸ்டாலின் உருக்கம்!

stalin-request-dmk-cadres

ராஜாஜி ஹாலில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

மறைந்த கருணாநிதியின் உடல் வைக்கப்படிருக்கும் ராஜாஜி ஹாலில், அஞ்சலி செலுத்த வந்து கூடியிருந்த தொண்டர்கள் முன் ஸ்டாலின் பேசும்போது, கூறியதாவது:

உயர்நீதிமன்றம் நமக்கெல்லாம் நல்ல தீர்ப்பை தந்திருக்கிறது. தலைவர் கலைஞரை பொறுத்தவரை, கடைசிவரை போராடியவர். அவர் நம்மை விட்டு பிரிந்துசென்ற பிறகு கூட, அவருக்குரிய இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளோம். சோகத்தில் இருக்கக் கூடிய நமக்கு கலைஞருடைய கனவு நனவாகிறது என்ற அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்திலே ஆட்சியிலே இருக்கக் கூடியவர்கள் தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க்கக் கூடாது என்று திட்டமிட்டார்கள்.

அதனால் நேரடியாக முதலமைச்சரை சந்திக்க போகிறேன் என்று நேற்று நம்முடைய கழகத் தோழர்களிடம் சொன்னபோது, ‘இல்லை, இல்லை. நீங்கள் உங்கள் மரியாதையை விட்டுவிடக் கூடாது, போகக் கூடாது’ என்றார்கள். ’எனக்கு கிடைக்கும் மரியாதையை விட, தலைவர் கலைஞரு க்கு கிடைக்கக் கூடிய பெருமைதான் முக்கியம்’ என்று நான் சென்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 

ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை. தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார்கள். அதை நாம் உயர்நீதிமன்றம் சென்று தவிடுபொடியாக்கி இருக்கிறோம். கலைஞருடைய மறைவு நமக்கு சோகத்தை தந்திருந்தாலும் அவருடைய உணர்வை நாம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம். 

எனவே, உங்கள் கால்களை தொட்டு மிகுந்த பணிவோடு கேட்கிறேன். இங்கே தலைவரின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது. அவரால் உருவாக்கப்பட்டிருக்கிற நான், அவர் சார்பில் உங்களை அன்போடு கேட்கிறேன், எப்போது நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்ததோ, அப்போதே கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். காவல்துறை நமக்கு பாதுகாப்பு தருகிறதோ, இல்லையோ, அமைதியாக நீங்கள் கலைந்துசென்றால்தான், இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறும். மீண்டும் மீண்டும் கேட்கிறேன், கலைந்து செல்வீர்களா? கலைந்து செல்லுங்கள். தயவு செய்து கேட்கிறேன், கலைந்து செல்லுங்கள். யாரும் படியேறி மேலேறி வரவேண்டும் என்ற முயற்சி யில் ஈடுபடக் கூடாது என்று உங்களின் உடன்பிறவா ஒருவனாக, சகோதரனாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close