[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

கருணாநிதிக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி

actor-rajinikanth-last-respect-for-karunanidhi-with-his-family

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதுதொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இன்று காலை 8.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே உயிரிழந்த கருணாநிதியின் உடல் அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டுள்ளனர். கருணாநிதியின் உடலுக்கு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தினார். தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக கருணாநிதியின் உடலுக்கு அரசு மரியாதையுடன், தேசியக்கொடி போர்த்தப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close