[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

குன்னூரில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்கள்.. கண்கொள்ளா காட்சி..!

kurinji-flower-blossoms-after-12-years-in-ooty

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் குன்னூரில் உள்ள முக்கிய சுற்றலாத்தலமான லேம்ஸ்ராக் பகுதியில் பூத்து குலுங்குவது அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சி நிலமான நீலகிரி பகுதிகளின் பல சிறப்புகளில் குறிஞ்சி மலர்களும் ஒன்று. மணி வடிவில் நீலநிறத்தில் உள்ள இம்மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளில் இயற்கையாகவே வளர்ந்துள்ள ஒருதாவரம். ஸ்ட்ரோபிலாந்தஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம்  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடியது. ஆசிய கண்டத்தில் 150 வகை குறிஞ்சியும், இந்தியாவில் 150 வகை குறிஞ்சியும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீலகிரியில் மட்டும் 30 வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன.  நீலகிரியில் தற்போது குன்னூரை அடுத்துள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. இக்கால கட்டத்தில்  இம்மலர்களில் தேன் அதிகமாக இருப்பதால் தேனீக்கள் இதனை சேகரிக்க தொடங்கும். அதேவேளையில் பழங்குடியின மக்களான இருளர் மற்றும் குரும்பர் இனமக்கள் தேனீக்கள் கூட்டிலிருந்து தேன் சேகரிப்பில் ஈடுபடுவர். சுற்றுலாப் பயணிகள் காணும் தூரத்தில் உள்ள இந்த குறிஞ்சி மலர்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close