[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

congress-leader-rahul-gandhi-came-kauvery-hospital

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவேரி மருத்துவமனையில் நலம் விசாரித்தார். 

சென்னை காவேரி மருத்துவமனையில் ‌திமுக தலைவர் கருணாநிதி 4ஆவது‌ நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ‌28ஆம் தேதி ம‌ருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நலம் குறித்து, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரி‌லால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ‌முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். சென்னை விமானநிலையம் வந்த அவர், உடனே அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சந்தித்தனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரசின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கருணாநிதியின் உடல்‌நிலை குறித்து வி‌சாரி‌த்து சென்ற நிலையில், ராகுல் காந்தி வந்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close