[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

காங்கிரஸ் கட்சி பிரமுகர் படுகொலை - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

puducherry-congress-member-murder-on-road

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோசப். இவர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். இன்று ஜோசப் இருசக்கர வாகனத்தில், காலப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தமிழக பகுதியான பெரியமுதலியார் சாவடி அருகே மர்ம நபர்கள் ஜோசப்பை மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். 

இதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தால் ஜோசப் சொந்த ஊரான காலப்பட்டில் பதட்டம் நிலவுகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close