[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

போதையில் காவலர்களை மிரட்டிய இளைஞர்: வீடியோ

drunkard-threats-police-viral-video

கோவையில் மதுப்போதையில் காவல்துறையினரை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கோவை ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்பவரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். ஆனால் மதுபோதையில் இருந்த அவர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தைரியம் இருந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என மிரட்டும் வகையில் பேசியதாக தெரிகிறது.

தகவலறிந்து அங்கு வந்த ரத்தினபுரி காவல்துறையினர் சுதர்ஷனை பிடித்துச்சென்றனர். அவர் மீது மதுப்போதையில் காவல்துறையினரை மிரட்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மதுபோதை தெளிந்த அவர், தான் செய்தது தவறு என்றும் தன்னை மன்னித்து விடும்படி கோரியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதனிடையே போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் காவல்துறையினரையே மிரட்டும் போக்கு அதிகரித்து வரும் போக்கிற்கு மக்கள் கண்டம் தெரிவித்துள்ளனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close