[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வாடகை வீட்டில் குடியிருப்பவரா ? - வாடகை உயரப் போகுது.. 

tn-govt-hikes-wealth-tax-may-affect-middle-class-people-badly

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலும் , 10 ஆண்டுகளுக்கு பிறகு மற்ற இடங்களிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு இப்போது வரை இல்லை. ஏனெனில் இது சொத்து வைத்திருப்பவர்களின் கவலை. ஏனெனில் வரி செலுத்தப் போவது அவர்களே, நாமில்லை. ஆனால் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள் பலர் இங்கு உண்டு, அவர்களும் சொத்து வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறார்கள். திடீரென உயர்த்தப்பட்ட சொத்து வரியால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. அதாவது “ஒரேடியாக வரியை உயர்த்தியது சரியா? ஆண்டு தோறும் சிறிது சிறிதாக உயர்த்தியிருந்தால் சுமை தெரியாமல் இருந்திருக்குமே? என்ற வாதம் ஒருபுறம், மற்றொரு புறம் 20 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இப்போதுதானே உயர்த்தப்படுகிறது. சொத்தின் மதிப்பும் உயர்கிறது அல்லவா? என்ற வாதமும் இல்லாமல் இல்லை. 

இதன் மூலம் சில விஷயங்களை ஆழ்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏன் திடீரென்று 20 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தப்படுகிறது. ஏன் இத்தனை நாள் உயர்த்தப்படவில்லை? உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதற்கும் இதற்கும் தொடர்புண்டா? உண்டு எனில் அரசின் தவறுக்கு மக்களை தண்டிக்கலாமா? என்ற கேள்விகளை பலரும் முன்வைக்கிறார்கள். சொத்து வரியை உயர்த்த வேண்டுமென்பது தமிழக அரசின் முடிவல்ல. வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் சொத்து வரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள இழப்பை காட்டி , வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால் வரி எவ்வளவு விதிக்க வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்தது. 100 சதவீதம் வரி உயர்வு என்பது அரசு எடுத்த முடிவு. இதனை குறைத்திருக்க முடியும். ஏனெனில் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி மூலம் கிடைக்கும் பணத்திலா உள்ளாட்சிகளும், நகர,மாநகராட்சிகளும் இயங்கின? என்ற கேள்வி வரும் போது, இந்த அமைப்புகளுக்கென மத்திய அரசு நிதி பெறப்பட்டு வந்தது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஏறக்குறைய ரூ.3358 கோடி பணம் கிடைக்கவில்லை. இதனை பெறுவதில் சிக்கலும் உள்ளது என்ற வாதமும் வருகிறது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறும் போது “தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள், என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது” என்றார். சமூக அமைப்பே சங்கிலி அமைப்பாக இருக்கும் போது இது நடுத்தர வர்க்கத்தை பெரிதும் பாதிக்கும் என்பது அவரது அவதானிப்பு

சொத்து வரியை உயர்த்துதல் என்பது இப்போதைக்கு அவசியமான ஒன்றுதான். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக சொத்தின் மதிப்பு உயராமல் அதே நிலையில் இருந்ததும் இப்போது அதன் மதிப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் அதன் பலனை அனுபவிக்க போகிறவர்கள் வெகு சிலர். அதே நேரத்தில் சொத்து வரி உயர்வால் வாடகை உயரும் போது, வாடகைக்கு குடியிருப்போர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவோர் கூடுதலாக செலவழிக்க அஞ்சுவார்கள். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால் சொத்து வரி வசூலிப்பதில் சுணக்கம் இருக்காது, சரிவர வசூலித்திருக்க முடியும். 100 சதவீத வரி உயர்வு என்பதை குறைக்கும் போது அது பெரிய பாதிப்பை தவிர்க்கும் என்பது வாடகைக்கு குடியிருப்போரின் கோரிக்கையாகவும் உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close