[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

முதன்முறையாக ரயில்வே உதவிக்குழு

railways-has-been-created-rail-mitra-group-in-tamil-nadu

தமிழகத்தில் முதல்முறையாக செங்கோட்டையில் ரயில்வே உதவிக்குழுவை உருவாக்கியுள்ளனர்.  

ரயில்வே துறையில் பாதுகாப்பும் ரயில்நிலையங்களில் பாதுகாப்பாளர்களின் தேவையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக அதிகப்படியான நபர்கள் இருந்தால் சிறப்பானதாகவும் உதவிகரமானதாகவும் இருக்கும். ஆகவே செங்கோட்டை ரயில்வே உதவி ஆய்வாளர் ஞானானந்த் என்பவர் ரயில் மித்ரா என்று ஒரு குழுவை உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவில் சமூக சேவகர்கள் சிலரை தேர்வு செய்துள்ளார். இந்தக் குழுவை தமிழகத்தில் முதல் முறையாக இந்த உதவி ஆய்வாளர் உருவாக்கி உள்ளார்.  இவர்களுக்கான பணி வரம்புகள் உள்ளிட்டவற்றையும் உருவாக்கி கொடுத்துள்ளார். 

தற்போது குற்றால சீசன் என்பதால் கூட்ட நெரிசலை சமாளிப்பது, நேரத்தில் ரயில் வருவதை பாதுகாப்புடன் அறிவிப்பது, விசில் ஊதி பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு பணிகளில் இந்தக் குழு ஈடுபட்டு வருகிறது.  இது குறித்து ஆய்வாளர் ஞானானந்த்  தெரிவிக்கும் போது இந்தப் பணிகளில் தன்னர்வலர்கள் ஈடுபடுவதால் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இதனால் சிறப்பான பணியை செய்ய  முடியும் எனவும் தெரிவித்தார்
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close