[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்

தேர்தலில் போட்டியிடும் 283 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள்

tn-election-283-candidates-with-criminal-backgrounds

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர், குற்றப்பின்னணி உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தமிழக தேர்தல் கண்காணிப்புக் குழு மற்றும் ஜனநா‌யக சீர்திருத்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‌சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 3 ஆயிரத்து 776 பேரில், 997 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதாகவும் அதில் 158 பேர் மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்ததாகக் கூறினர். இதில், திமுகவின் கே.பி.பி.சாமி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன், பா.ம.கவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளதாகக் கூறினர்‌.

மேலும், ஒரு சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதேபோல், 8 வேட்பாளர்கள் மீது பெண்கள் சார்ந்த குற்றங்களும், 30 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பினர் கூறினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close