[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

யாரேனும் நோட்டம் பார்க்கின்றார்களா? : பட்டதாரி பெண்ணின் திடீர் விபரீத முடிவு !

kanyakumari-graduate-women-attempt-suicide

கன்னியாகுமரி கடலில் பட்டப்பகலில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன்பிடி துறைமுக மேற்கு கடல் அலை தடுப்பு சுவர் அருகே, இன்று இருசக்கர வாகனத்தில் தனியாக ஒரு இளம்பெண் வந்தார். சுவரின் மறுபக்கம் கடலில் அமைந்துள்ள பாறையின் மீது ஏறி நின்ற அப்பெண், சுற்றுப்புரத்தில் யாரேனும் பார்க்கின்றார்களா? என நோட்டமிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு திடீரென அப்பெண் கடலுக்குள் குதித்துள்ளார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிலர் கூச்சலிட, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் இளம் பெண்ணை மீட்க கடலுக்குள் குதித்தனர்.

நீண்ட நேர போரட்டத்திற்குப் பிறகு அப்பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட இளம் பெண் குளைச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண் கன்னியாகுமரி ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

இவர் ஓசூரில் உள்ள பொறியியல் கல்லூரில் முதுநிலை ஆர்க்கிடெக் பயின்று வருவதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இவரின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அந்தப் பெண் எதற்காக தற்கொலை முயன்றார் என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் பெரும் வருத்தம் அடைந்துள்ளனர். அத்துடன் பட்டப்பகலில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.

(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close