[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ப.சிதம்பரத்தின் உறவினர் கடத்திக் கொலை

ex-minister-p-chidambaram-s-relative-kills

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான திருப்பூர் தொழிலதிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வந்தவர் சிவமூர்த்தி. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரத்தின் உறவினர். கடந்த 25-ம் தேதி முதல் இவரை காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. 

அதனருகே 3 பேர் இருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் இரவில் தனியாக கார் ஒன்று நிற்பதை கண்டு அதனருகே சென்றுள்ளனர். அவர்களை கண்டதும் சொகுசு கார் அருகே நின்ற 3 பேர் தப்பியோடியதாக தெரிகிறது. அவர்களை காவல்துறையினர் விரட்டிப் பிடித்தனர். 3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி என்பதும், சிவமூர்த்தி என்பவரைக் கொலை செய்து அவரது உடலுடன் 2 நாட்கள் காரில் சுற்றியதும் தெரிய வந்ததாக காவல்துறையினர் கூறினர். 

தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணுடன் சிவமூர்த்திக்கு தொடர்பு இருந்ததால், அந்தப் பெண்ணின் கணவரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிவமூர்த்தி உடலை எங்கு போடுவது என்று தெரியாமல் அவரது உடலுடன் 2 நாட்கள் சுற்றிய 3 பேரும், இறுதியாக ஓசூர் ஏரியில் சடலத்தை வீசி விட்டதாக காவல்துறையினர் கூறினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close