[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

பூட்டாத வீடு?.. பூட்டப்பட்ட காவல் நிலையம்!.. கொள்ளை போன 5 லட்சம்

rs-5lakhs-theft-in-krishagiri

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மாங்காய் வியாபாரி வீட்டில் இருந்த ஐந்து லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் மாங்காய் வியாபாரி சிவசங்கரன். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக மாங்காய்களை கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். சிவசங்கரனின் வீடும் கடையும் அருகருகே உள்ளது. தொழில் தொடர்பாக வெளியே செல்லும் சிவசங்கரன் நள்ளிரவில் வீடு திரும்புவது வழக்கம். இதனால் வீட்டு கதவை பூட்டாமல் சிவசங்கரனின் மனைவி உள்ளிட்டவர்கள் உறங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இரவில் வீடு திரும்பும் சிவசங்கரன் பூட்டப்படாத கதவை திறந்து கொண்டு உள்ளே வருவார் என்றும் மீண்டும் வெளியே செல்லும் போது கதவை சாத்திவிட்டு செல்வார் என்றும் தெரிகிறது. 

இந்நிலையில் நேற்றிரவு தனது கடையில் இருந்து 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த சிவசங்கரன் அதை அங்கிருந்த பீரோவில் வைத்துவிட்டு பூட்டி சாவியையும் அங்கேயே வைத்துவிட்டு மீண்டும் கடைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவசங்கரன் உறங்கிக் கொண்டு இருந்த குடும்பத்தினரை எழுப்பினார். அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனவும், வழக்கம் போல் சிவசங்கரன் தான் வந்து செல்வதாக எண்ணி உறங்கியதாவும் கூறினர்.

பணத்துடன் கடையிலிருந்து வந்த சிவசங்கரனை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் அவர் சென்றவுடன் வீட்டுக்குள் நுழைந்து கைவரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து புகார் அளிக்க நள்ளிரவில் சிவசங்கரன் சென்ற போது போச்சம்பள்ளி காவல் நிலையம் பூட்டப்பட்டு இருந்தது. இன்று காலை 7 மணிக்கு காவல் நிலையம் திறக்கப்பட்டதும் திருட்டு குறித்து சிவசங்கரன் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர், காவல் நிலையம் பூட்டப்படவில்லை என்றும் வெளிக்கதவை சாத்தி விட்டு ரோந்துக்கு காவலர்கள் சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close