[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

சென்னையை உலுக்கிய ஈரானிய கொள்ளையர்கள்: விரட்டிப் பிடித்த காவல்துறை

iranian-robbers-arrested-in-chennai

சென்னையில் ஒரே நாளில் 44 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்த ஈரானிய கொள்ளையர்களை, தமிழக காவல்துறையினர் ஆந்திரா வரை விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர். 

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மாதவரம், பாடிகுப்பம், புளியந்தோப்பு, மாங்காடு உள்ளிட்ட 5 இடங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களி‌டம் இருந்து 44 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி‌ச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொள்ளை நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியது காவல்துறை. அதில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவெண்னை வைத்து கண்காணித்தபோது, கொள்ளையர்கள் மாதவரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வடசென்னை இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை மாதவரத்திற்கு விரைந்தபோது, கொள்ளையர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றதை காவலர்கள் கண்டறிந்தனர். ஆந்திர மாநிலத்தின் கர்ணூல் சுங்கச்‌சாவடி வரை கொள்ளையர்களை துரத்திச் சென்ற தனிப்படையினர், சிசிடிவி காட்சியில் திருடன் அணிந்திருந்த தொப்பியை அடையாளமாக வைத்து, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் அப்பாஸ், அலி, தவ்ஹித், நவாப் ஆகிய நால்வரை கைது செய்தனர். பிடிபட்ட நால்வரும் ஈரானிய கொள்ளையர்கள் என்பது அப்போது தெரியவந்தது.

ஈரானிய கொள்ளையர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தவிர, நாட்டின் பிற மாநிலங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளனர். ஈரான் நாட்டிலிருந்து அகதிகளாக வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தங்கியிருக்கின்றனர். அவர்களில் சிலர், சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் கைவரிசை காட்டாமல், நாட்டின் பிற மாநிலங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது நிலுவையில் இருக்கின்றன. தற்போது தமிழக காவல்துறை வசம் சிக்கியிருக்கும் நால்வரும், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து காரில் சென்னை வந்து, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் மூலம் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதிக அளவு நகைகள் திருடப்பட்டதும், மீண்டும் மகாராஷ்டிராவுக்குத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கைதான நால்வரிடம் இருந்து 44 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close