[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

“மனைவியுடன் தகாத உறவு - கணவருக்கு கொலை மிரட்டல்” - எஸ்.ஐ மீது புகார்!

husband-complaint-against-police-si-in-salem

சேலத்தில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டு, தன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கோவை காவல்துறை ஆணையரிடம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்றவர் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நான் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் போது எனது வீட்டின் மாடியில் காவல் ஆய்வாளர் விதுன்குமார் என்பவர் வசித்து வந்தார். ஆரம்பத்தில் என்னுடன் நண்பர் போல பழகி வந்த அவர், ஓராண்டிற்கு பிறகு எனது மனைவியுடன் பழகி தகாத உறவு வைத்துள்ளார்”.

“சிறிது காலத்திற்கு பிறகு இந்த உண்மை எனக்கு தெரியவர, எனது மனைவியை கண்டித்தேன். அதன்பின்னர் விதுன்குமாருக்கு விஷயம் தெரியவர, அவர் என்னை அழைத்து சில புகைப்படங்களை காண்பித்து மிரட்டினார். அத்துடன் நான் சொல்வதை செய்ய வேண்டும் என மிரட்டினார். நான் எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு அமைதியாய் இருந்தேன். ஆனால், அதன்பின்னரும் அவர் என் மனைவியிடம் செல்போனில் பேசியும், ரகசியமாய் சந்தித்தும் வந்தார். நான் எனது மனைவியை எச்சரித்தால், உடனே விதுன்குமாரின் ஆட்கள் என்னை தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்”.

“அதுமட்டுமின்றி உன்னையும், உனது குழந்தைகளையும் கொன்றுவிடுவோம் என மிரட்டினர். நான் இப்பிரச்னைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியாமல் குடியிருப்பை மாற்றி பல இடங்களுக்கு குடியேறினேன். ஆனால் விதுன்குமார் எங்கள் குடும்பத்தை பின்தொடர்ந்து, எங்கள் குடும்ப நிம்மதியை சீர்குலைத்து வருகிறார். அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்று பல பெண்களின் குடும்பத்தை சீர்குலைத்துள்ளார். இனிமேலும் பொறுக்க முடியாது என எனது குடும்பத்தின் நலன் கருதி இந்த மனுவை அளிக்கிறேன். இதற்கு பின்னர் எனக்கோ, எனது குழந்தைகளின் உயிருக்கோ ஏதேனும் ஆபத்து வந்தால் அது விதுன்குமாரால் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என உள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close